Pages

Saturday, April 9, 2011

செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....?

அளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது.

அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும்.

செக்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக அமையவேண்டும்.

தூக்கம் என்பது ஒரு நாள் முழுக்க மனதும்- உடலும் அனுபவிக்கும் டென்ஷனைத் தீர்ப்பது. நேற்றுதான் தூங்கியிருக்கிறோமே அதனால் இன்று தூங்கவேண்டாம் என்று யாரும் கருதுவதில்லை. தினமும் தூங்கித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயம். அதுபோல் செக்சையும் நினைக்கக்கூடாது.

தூக்கத்திற்கு முன்னால் ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுபோக்கு என்றும் செக்சை கருதிவிடக்கூடாது. தம்பதிகளிடையேயான செக்ஸ் என்பது கடமைக்காக என்ற நிலையில் இருந்து விடக்கூடாது. இருவரையும் தூக்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்தாகவும் அதை கருதிவிடக்கூடாது.

ஏதோ இதுவும் ஒரு வேலை என்ற மனநிலையில் இருவரும் உறவில் ஈடுபடவும் கூடாது. உறவுக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்கும் நாளில் காலையில் இருந்தே உங்கள் நினைவில் அந்த இன்பம் இருக்கட்டும். அதை நினைவில் வைத்துக்கொண்டே உற்சாகத்தோடு வேலைகளைப் பாருங்கள்.

அன்று இரவு உணவை சற்று முன்பாகவே முடித்துவிட்டு, வேலைகளை எல்லாம் செய்து முடியுங்கள். வழக்கமாக கணவனும்- மனைவியும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, அன்போடு, ஆவலோடு படுக்கை அறைக்குள் நுழையுங்கள்.

அங்கு சென்ற பின்பு தொந்தரவிற்குரிய பேச்சு, சிந்தனை எதுவும் தேவையில்லை. உடல், மனது இரண்டையும் உற்சாகப்படுத்தவும்- அன்பை மேம்படுத்தவும் செக்ஸ் அவசியம் என்பதை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபடுங்கள். காலையில் செயல்படுவது, அந்த நாள் முழுவதையும் மகிழ்ச்சிக்குரியதாக்கும்

உறவில் நீடித்த இன்பம் கிடைக்க‌!!!

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்… மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள்.

ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி ‘ஹார்டுவேர்’ போல ‘சாப்ட்வேரும்’ அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அதீத அவசியம்.

எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.

வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.

கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘ஆட்டத்தில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும். அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும்.

கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை. உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும்.

அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும்.

முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும். இன்னொரு முக்கியமான விஷயம்.

எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை!

Wednesday, March 23, 2011

ஒரு கணவன் - மனைவி அன்பை எவ்வாறு பரிமாறிக்கொள்ள வேண்டும் ......?

மனதுக்கும், செக்ஸ்க்கும் அளவு கடந்த நெருக்கம் உண்டு. மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளைக்கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும்.

* செக்ஸ் மகிழ்ச்சியை அதிகமாக கொண்டாட விரும்பும் தம்பதிகளுக்கு அடிப்படை தேவை அன்பும், நம்பிக்கையும். அதிகமான நம்பிக்கை வைத்து அன்பு செலுத் தப்படும்போதுதான் கணவன்- மனைவி இடையே காதல் கரைபுரண்டு ஓடும். இரு வரும் எல்லாவற்றையும் மனந்திறந்து பேசி, வெளிப்படையாக வாழ வேண்டும்.

* இயந்திரமயமான வாழ்க்கை முறை தம்பதிகளிடையேயான மனோரீதியான நெருக் கத்தை வெகுவாக குறைக்கிறது. எவ்வளவு அதிகமான வேலை, எவ்வளவு அதிகமான சம்பளம், வேலையில் எவ்வளவு பெரிய நெருக்கடி இருந்தாலும் மனைவிக்காக ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை கணவரும், கணவருக்காக ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை மனைவியும் குறைத்து விடக்கூடாது.

வேலை அழுத்தத்திலிருந்து விலகி, மாதத்தில் நான்கு நாட்களாவது குடும்பத்தினரோடு செலவிட வேண்டும். குடும்பத் தினரோடு வெளிïர் பயணம் செல்லவும் முன்வரவேண்டும்.

* தினமும் குறிப்பிட்ட நேரத்தை கணவரும்- மனைவியும் தங்களுக்காக ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து சினிமா பார்ப்பது, பாடல் கேட்பது அல்லது பாடுவது, விளையாடுவது, பேசிக்கொண்டிருப்பது.. இப்படி அவர் களுக்கு எது பிடித்தாலும் அதை செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* அடிக்கடி இருவரும் தங்களுக்குள் பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். அன்பை ஆழப்படுத்தும் சக்தி பரிசுகளுக்கு உண்டு.

* அலுவலகத்தில் இருந்து கணவர் திரும்பும்போது, மனைவி சமையல் அறையில் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தால் தானும் அங்கே சென்று மனைவிக்கு சின்னச்சின்ன உதவிகளை செய்ய ஆரம்பிக்கலாம்.

அந்த சந்தர்ப்பத்தில் தன் அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதை அருகிலிருந்து கூறத்தொடங்கிவிட்டாலே கணவர் மீது மனைவிக்கு தனி கரிசனம் உருவாகிவிடும்.

* படுக்கை அறைக்குள் எந்த வேலையையும் கொண்டு சொல்லாதீர்கள். படுக்கை அறை கணவன், மனைவிக்கு இடையேயான தனி உலகம். அந்த உலகத்திற்குள் சிந் தனையில்கூட உங்கள் இருவரையும் தவிர வேறுயாரும்-எதுவும் இருக்க வேண்டாம்.

பெண்களை எளிதாக கவரும் ஆண்களின் குணங்கள்!

ஒரு பெண்ணை அடைவது என்பது மிகவும் சுலபமான விடயம் அல்ல என்று கூறுபவர்களும் உண்டு. அதே சமயத்தில், ஒரு பெண்ணை நான் விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன் என்று முரண்பாடாக கூறுபவர்களும் உண்டு.

தான் விரும்பிய பெண்களை அடையும் ஆண்களுக்கு என்று சில விஷேசக் குணங்கள்இருப்பதாக காம சூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. அதாவாது,

பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.

பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.

விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.

அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.

உல்லாசமாக இருப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவன்.

அதிக துணிச்சல் உடையவன்.

இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.

காம சாஸ்திரம் நன்கு கற்றவன்.

தாராள மனப்பான்மை உடையவன்.

அடிக்கடி பெண்கள் பார்வையில்தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்.

ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.

ரகசியத்தை அறிந்தவன்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் மனதில் வெகுவாக இடம் பிடிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மையாகும்