Pages

Tuesday, November 15, 2011

இருட்டு கடை அல்வா

இருட்டு கடை அல்வா


நெல்லையப்பர் கோயில் எதிரே 1900ம் ஆண்டு கிருஷ்ணசிங் என்பவர் லாலாகடை துவங்கினார். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை "40 வாட்ஸ்' பல்பு மட்டும் எரிந்துகொண்டிருக்கும். இதனால் அக்கடைக்கு "இருட்டுக்கடை'அல்வா என பெயர் வந்தது. இந்த கடையில் இருந்து தயாரிக்கப்படும் "அல்வா' திருநெல்வேலிக்கு பெயர் பெற்றுத்தந்தது. மேலும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இக்கடையில் தயார் செய்யப்படும் அல்வா கொண்டு செல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது.



இந்த இருட்டுக்கடை அல்வாவை நெல்லையில்
அறிமுகப்படுத்தியவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல குடும்பத்தினர் பிழைப்பு தேடி நெல்லைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சொக்கப்பட்டி அரண்மனையில் பணிக்கு சேர்ந்தனர். அவர்களில்
ஒருவர்தான் 1882-ம் ஆண்டு வந்த ஜகன்சிங். ராஜஸ்தான் இனிப்பு வகைகள் செய்வதில் ஜகன்சிங் நிபுணர். ராஜஸ்தான் வகை இனிப்புகள் தயாரித்து நெல்லையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
ராஜஸ்தான் இனிப்பு வகையில் ஒன்றான அல்வாவையும் தயாரித்து
தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று விற்று வந்தார். ஜகன்சிங்கின் புது வகை இனிப்பான அல்வா மிகவும் பிடித்து விட்டது. இதனால் அல்வாவுக்கு தனி மவுசு ஏற்பட்டது.
இதனால் அல்வா வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது.
ஜகன்சிங் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதில் ஈடுபடுத்தி வியாபாரத்தை பெருக்கினார். அவர்களின் வழி தோன்றல்கள் தான் நெல்லை பகுதியில் இனிப்பு கடைகளை நடத்தி வருகின்றனர்.
மற்ற கடைகளுக்கு கிடைக்காத புகழும் வர்த்தகமும் இருட்டுக்கடைக்கு மட்டும்கிடைத்தது. இதனால் அங்கு அல்வா விற்பனை நாளுக்கு நாள் அமோகமாக நடந்தது. அல்வா என்றாலே இருட்டுக்கடைதான் என்ற நிலை ஏற்பட்டு மக்கள் மனதில் நிலையான பெயர் பெற்று விளங்குகிறது.




No comments:

Post a Comment