Pages

Friday, November 18, 2011

ம‌ஸ்கோ‌த் அ‌ல்வா

ம‌ஸ்கோ‌த் அ‌ல்வா நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.


மஸ்கோத் அல்வா என்றதும் ஓமன் நாடு தலைநகர் மஸ்கோத்(muscat) அல்வா வா பாஸ் !


மஸ்கோத் பெயர்க்காரணம் தெரியலைங்க தெரிஞ்சா சொல்லுங்க...........
மஸ்கோத் அல்வா நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து தயாரிக்கபடுகிறது . திசையன்விளை மற்றும் முதலூர்ஆகிய ஊர்களில் இந்த மஸ்கோத் அல்வா சில குடும்பம்களால் தயாரிக்கபடுகிறது .கடந்த பத்து வருடங்களில் தமிழகம் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இந்த அல்வா மி௧வும் பிரசித்தி பெற்றது.
வியாபார நிமித்தமாக இலங்கைக்கு சென்று வந்த முதலூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவரே மஸ்கோத் அல்வாவை தமிழகத்தவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 
இது நெல்லை அல்வா போல் இல்லாமல் சுவையிலும் குணத்திலும் முற்றிலும் வேறு மாதிரி இருக்கும் .இதன் மூலபொருள் தேங்காய் பால்.


தி௫நெல்வேலி என்றால் நினைவிற்க்கு வ௫வது அல்வா அதை போல் திசையன்விளை என்றால் நினைவிற்க்கு வ௫வது மஸ்கோத் அல்வா.

நெல்லைக்கு இருட்டு கடை போல் இந்த ஊருக்கு ஏதாவது கடை இருக்கா? 
இருக்கே  தங்கையா ஸ்வீட்ஸ் ,

அது சரி அண்ணே அந்த கடையோட விலாசம் 
திசையன்விளை மெயின் பஜாரில் அற்புத விநாய௧ர் கோவில் ஜங்ஷனில் அமைந்துள்ள தங்கையா சுவீட்ஸ் .



No comments:

Post a Comment