திருநெல்வேலி என்றதும் நம் நினைவுக்கு வருவது அல்வா .இங்கு பல வகையான அல்வா தயாரிக்க படுகிறது ,இங்கு உள்ள அணைத்து இனிபகம்களிலும் அல்வா கிடைக்கும், இருந்தாலும் இங்கு ஒரு சில கடைகளில் மட்டுமே தரமான சுவையான அல்வா கிடைக்கும்.
நெல்லைக்கு அல்வா என்று பேரு வாங்கி தந்த இருட்டு கடை அல்வா சர்வர்தேச அளவில் ஏற்றுமதி செய்யபடுகிறது .இது மட்டும் அல்ல சாந்தி ஸ்வீட்ஸ் ,திசையன்வில்லை மஸ்கட் அல்வா போன்றவையும் ஏற்றுமதி செய்யபடுகிறது .
அப்படி என்ன இதற்கு சிறப்பு என்று வெகுளிதனமாய் கேக்கரிங்களா,
இருட்டு கடை அல்வா வாங்கி ஒரு மாசம் ஆனாலும் கெட்டுபோகாது, சுவையும் மாறாது .இதன் சுவைக்கு காரணம் தாமிரபரணி தண்ணீர் தான் என்று அதன் உரிமையாளர் உறுதி பட கூறுகிறார்.
மேலும் இந்த இருட்டு கடை அல்வா விற்பனை நவீன மேலாண்மை களுக்கு உட்படாது ,பழைய சுண்ணாம்பு அடித்த சுவர் ,40watts பல்ப்,கடைக்கு ஷுட்டெர் கூட கிடையாது பழைய மர பலகை தான் வரிசையாக வைத்து முடுவர்கள் ,கடை திறக்கும் நேரம் மாலை 5 டு 10 ,அல்வாவை தவிர வேறு எதுவும் கிடையாது ,வேறு கிளைகள் கிடையாது ,கடை தான் பத்து மணி வரை ஆனாலும் 7 மணிக்குள் அல்வா விற்று திர்ருந்து விடும் .அட பெயர் பலகை கூட இல்லை நா நம்புவீங்களா .
இருட்டு கடை அல்வா நெல்லை டவுன்னில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் உள்ளது .
அல்வா சாப்பிட்டா வயற்றுபோக்கு சரியாகும் என்று நம்ப படுகிறது .
சரக்கு அடிக்கும் போது இருட்டுகடை அல்வா சாப்பிட்டால் போதை நன்றாக ஏறுவதாக டாஸ்மாக் தமிழன் கண்டுபிடித்து உள்ளான் .
இருட்டு கடை தவிர இன்னும் பல கடைகள் அல்வாவுக்கு பெயர் பெற்றது.
நெல்லை ஜங்ஷன் னில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ்( சாந்தி யாருக்கு அல்வா குடுத்தான்னு கேக்கபடாது..)
(நெல்லையில் எங்கு பார்த்தாலும் சாந்தி ஸ்வீட்ஸ் உள்ளதால் விசாரித்து வாங்கவும் ) அதன் எதிரில் உள்ள லக்ஷ்மி வில்லாஸ்
இர்ரடுக்கு மேம்பாலம் அடியில் உள்ள சந்திர வில்லாஸ் .
இருட்டுக்கடை பக்கத்திலேயே இவர்களே விளக்கெல்லாம் போட்டு ஒரு கடை நடத்துகிறார்கள், அதன் பெயர் விசாகம் ஸ்வீட்ஸ் தேரடி இந்தியன் வங்கி எதிரில் உள்ளது (புதன் விடுமுறை) காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை கிடைக்கும் இதே அல்வா அங்கும் கிடைக்கும். சுவைத்துப்பாருங்கள் நன்றாக இருக்கும்.(இந்த செய்தி பலருக்கு தெரியாது )
மாலை நேரத்தில் சந்திர வில்லாஸ் சில் 50gm அல்வா வங்கி சூடாக சாப்பிட்டால் அதன் சுவையை மறக்க முடியாது
எனக்கு தெரிந்து நெல்லையில் தான் 50gm அல்வா சாப்பிட்டு கையை நீட்டினால் காரம் தருவார்கள் .
ஜங்ஷன்னில் உள்ள போலி இருட்டு கடையில் சென்று ஏமாந்து விடாதீர்கள். ஊருக்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றவே, கடையின் பெயரையே "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" என்று வைத்துள்ளனர்.
எல்லாம் சரி அது என்ன அல்வா கொடுக்குறது
அதாவது தரமான அல்வாவை நீங்க விரல்ல எடுதிங்கான கையுல ஒட்டாது.
நெல்லைக்கு வந்தால் அல்வா சுவைக்காமல் செல்லாதீர்கள் .
mascat alva va pathi sollava illayae.....?
ReplyDeletemuscat அல்வா விற்க்கு விரைவில் பதிவு எழுதுவேன் சற்று காத்திருங்கள் லக்ஷ்மி நரஷிமா
ReplyDeletealva kodukuratha pathi annan sathyaraj sonnatha vida palrukkum puriyumpadiya sonna annan seeralan avargalin vaaiyukku sarkarai podamal ellorum alvan podunga
ReplyDeleteHalwa sales should be extended to international level.
ReplyDelete