Pages

Wednesday, November 30, 2011

வெங்காயம் சாப்பிடுங்கள்


வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.


பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்: வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க: வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அழகாக மாற: உதவும் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.
உஷ்ணக் கடுப்பு: அகல பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு: சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விசக் கடிக்கு: வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு: பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருகும்: மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.
ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி: பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

Wednesday, November 23, 2011

கிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்


அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்’ கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி’ யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ’ யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்’ வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.
கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்’ சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.



அழகு.............இளமை...... கிரீன் டீ................


கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.
எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்

  • ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
  • ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
  • இதய நோய் வராமல் தடுக்கிறது.
  • ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
  • புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
  • எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
  • பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
  • வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
  • ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
  • சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
  • பருக்கள் வராமல் தடுக்கிறது.
  • நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
  • மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
Source:Daily Thanthi (Sunday Magazine 20/11/2011)



பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.

Friday, November 18, 2011

ம‌ஸ்கோ‌த் அ‌ல்வா

ம‌ஸ்கோ‌த் அ‌ல்வா நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.


மஸ்கோத் அல்வா என்றதும் ஓமன் நாடு தலைநகர் மஸ்கோத்(muscat) அல்வா வா பாஸ் !


மஸ்கோத் பெயர்க்காரணம் தெரியலைங்க தெரிஞ்சா சொல்லுங்க...........
மஸ்கோத் அல்வா நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து தயாரிக்கபடுகிறது . திசையன்விளை மற்றும் முதலூர்ஆகிய ஊர்களில் இந்த மஸ்கோத் அல்வா சில குடும்பம்களால் தயாரிக்கபடுகிறது .கடந்த பத்து வருடங்களில் தமிழகம் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இந்த அல்வா மி௧வும் பிரசித்தி பெற்றது.
வியாபார நிமித்தமாக இலங்கைக்கு சென்று வந்த முதலூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவரே மஸ்கோத் அல்வாவை தமிழகத்தவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 
இது நெல்லை அல்வா போல் இல்லாமல் சுவையிலும் குணத்திலும் முற்றிலும் வேறு மாதிரி இருக்கும் .இதன் மூலபொருள் தேங்காய் பால்.


தி௫நெல்வேலி என்றால் நினைவிற்க்கு வ௫வது அல்வா அதை போல் திசையன்விளை என்றால் நினைவிற்க்கு வ௫வது மஸ்கோத் அல்வா.

நெல்லைக்கு இருட்டு கடை போல் இந்த ஊருக்கு ஏதாவது கடை இருக்கா? 
இருக்கே  தங்கையா ஸ்வீட்ஸ் ,

அது சரி அண்ணே அந்த கடையோட விலாசம் 
திசையன்விளை மெயின் பஜாரில் அற்புத விநாய௧ர் கோவில் ஜங்ஷனில் அமைந்துள்ள தங்கையா சுவீட்ஸ் .



Tuesday, November 15, 2011

திருநெல்வேலி அல்வா டா


திருநெல்வேலி என்றதும் நம் நினைவுக்கு வருவது அல்வா .இங்கு பல வகையான அல்வா தயாரிக்க படுகிறது ,இங்கு உள்ள அணைத்து இனிபகம்களிலும் அல்வா கிடைக்கும், இருந்தாலும் இங்கு ஒரு சில கடைகளில் மட்டுமே தரமான சுவையான அல்வா கிடைக்கும்.

நெல்லைக்கு அல்வா என்று பேரு வாங்கி தந்த இருட்டு கடை அல்வா சர்வர்தேச அளவில் ஏற்றுமதி செய்யபடுகிறது .இது மட்டும் அல்ல சாந்தி ஸ்வீட்ஸ் ,திசையன்வில்லை மஸ்கட் அல்வா போன்றவையும் ஏற்றுமதி செய்யபடுகிறது .

        அப்படி என்ன இதற்கு  சிறப்பு என்று வெகுளிதனமாய் கேக்கரிங்களா,
இருட்டு கடை அல்வா வாங்கி ஒரு மாசம் ஆனாலும் கெட்டுபோகாது, சுவையும் மாறாது .இதன் சுவைக்கு காரணம் தாமிரபரணி தண்ணீர் தான் என்று அதன் உரிமையாளர் உறுதி பட கூறுகிறார்.

மேலும் இந்த இருட்டு கடை அல்வா விற்பனை நவீன மேலாண்மை களுக்கு உட்படாது ,பழைய சுண்ணாம்பு அடித்த சுவர் ,40watts   பல்ப்,கடைக்கு ஷுட்டெர் கூட கிடையாது பழைய மர பலகை தான் வரிசையாக வைத்து முடுவர்கள் ,கடை திறக்கும் நேரம் மாலை 5 டு 10 ,அல்வாவை தவிர வேறு எதுவும் கிடையாது ,வேறு கிளைகள் கிடையாது ,கடை தான் பத்து மணி வரை  ஆனாலும் 7  மணிக்குள் அல்வா விற்று திர்ருந்து விடும் .அட பெயர் பலகை கூட இல்லை நா நம்புவீங்களா .

இருட்டு கடை அல்வா நெல்லை டவுன்னில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் உள்ளது .
அல்வா சாப்பிட்டா வயற்றுபோக்கு சரியாகும் என்று நம்ப படுகிறது .
சரக்கு அடிக்கும் போது இருட்டுகடை அல்வா சாப்பிட்டால் போதை நன்றாக ஏறுவதாக டாஸ்மாக் தமிழன் கண்டுபிடித்து உள்ளான் .


இருட்டு கடை தவிர இன்னும் பல கடைகள் அல்வாவுக்கு பெயர் பெற்றது.
நெல்லை ஜங்ஷன் னில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ்( சாந்தி யாருக்கு அல்வா குடுத்தான்னு கேக்கபடாது..) 
(நெல்லையில் எங்கு பார்த்தாலும் சாந்தி ஸ்வீட்ஸ் உள்ளதால் விசாரித்து வாங்கவும் ) அதன் எதிரில் உள்ள லக்ஷ்மி வில்லாஸ் 
இர்ரடுக்கு மேம்பாலம் அடியில் உள்ள சந்திர வில்லாஸ் .

இருட்டுக்கடை பக்கத்திலேயே இவர்களே விளக்கெல்லாம் போட்டு ஒரு கடை நடத்துகிறார்கள், அதன் பெயர் விசாகம் ஸ்வீட்ஸ் தேரடி இந்தியன் வங்கி எதிரில் உள்ளது (புதன் விடுமுறை) காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை கிடைக்கும் இதே அல்வா அங்கும் கிடைக்கும். சுவைத்துப்பாருங்கள் நன்றாக இருக்கும்.(இந்த செய்தி பலருக்கு தெரியாது )

மாலை நேரத்தில் சந்திர வில்லாஸ் சில் 50gm  அல்வா வங்கி சூடாக சாப்பிட்டால் அதன் சுவையை மறக்க முடியாது 
எனக்கு தெரிந்து நெல்லையில் தான் 50gm   அல்வா சாப்பிட்டு கையை நீட்டினால் காரம் தருவார்கள் .
ஜங்ஷன்னில் உள்ள போலி இருட்டு கடையில் சென்று ஏமாந்து விடாதீர்கள்.  ஊருக்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றவே, கடையின் பெயரையே "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" என்று வைத்துள்ளனர்.

எல்லாம் சரி அது என்ன அல்வா கொடுக்குறது 
அதாவது தரமான அல்வாவை நீங்க விரல்ல எடுதிங்கான கையுல ஒட்டாது.

நெல்லைக்கு வந்தால் அல்வா சுவைக்காமல் செல்லாதீர்கள் .

இருட்டு கடை அல்வா

இருட்டு கடை அல்வா


நெல்லையப்பர் கோயில் எதிரே 1900ம் ஆண்டு கிருஷ்ணசிங் என்பவர் லாலாகடை துவங்கினார். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை "40 வாட்ஸ்' பல்பு மட்டும் எரிந்துகொண்டிருக்கும். இதனால் அக்கடைக்கு "இருட்டுக்கடை'அல்வா என பெயர் வந்தது. இந்த கடையில் இருந்து தயாரிக்கப்படும் "அல்வா' திருநெல்வேலிக்கு பெயர் பெற்றுத்தந்தது. மேலும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இக்கடையில் தயார் செய்யப்படும் அல்வா கொண்டு செல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது.



இந்த இருட்டுக்கடை அல்வாவை நெல்லையில்
அறிமுகப்படுத்தியவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல குடும்பத்தினர் பிழைப்பு தேடி நெல்லைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சொக்கப்பட்டி அரண்மனையில் பணிக்கு சேர்ந்தனர். அவர்களில்
ஒருவர்தான் 1882-ம் ஆண்டு வந்த ஜகன்சிங். ராஜஸ்தான் இனிப்பு வகைகள் செய்வதில் ஜகன்சிங் நிபுணர். ராஜஸ்தான் வகை இனிப்புகள் தயாரித்து நெல்லையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
ராஜஸ்தான் இனிப்பு வகையில் ஒன்றான அல்வாவையும் தயாரித்து
தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று விற்று வந்தார். ஜகன்சிங்கின் புது வகை இனிப்பான அல்வா மிகவும் பிடித்து விட்டது. இதனால் அல்வாவுக்கு தனி மவுசு ஏற்பட்டது.
இதனால் அல்வா வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது.
ஜகன்சிங் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதில் ஈடுபடுத்தி வியாபாரத்தை பெருக்கினார். அவர்களின் வழி தோன்றல்கள் தான் நெல்லை பகுதியில் இனிப்பு கடைகளை நடத்தி வருகின்றனர்.
மற்ற கடைகளுக்கு கிடைக்காத புகழும் வர்த்தகமும் இருட்டுக்கடைக்கு மட்டும்கிடைத்தது. இதனால் அங்கு அல்வா விற்பனை நாளுக்கு நாள் அமோகமாக நடந்தது. அல்வா என்றாலே இருட்டுக்கடைதான் என்ற நிலை ஏற்பட்டு மக்கள் மனதில் நிலையான பெயர் பெற்று விளங்குகிறது.




Monday, November 14, 2011

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி
கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .                                                    
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. 
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.



இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
  
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China  இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது  நாமும் விளித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

Saturday, April 9, 2011

செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....?

அளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது.

அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும்.

செக்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக அமையவேண்டும்.

தூக்கம் என்பது ஒரு நாள் முழுக்க மனதும்- உடலும் அனுபவிக்கும் டென்ஷனைத் தீர்ப்பது. நேற்றுதான் தூங்கியிருக்கிறோமே அதனால் இன்று தூங்கவேண்டாம் என்று யாரும் கருதுவதில்லை. தினமும் தூங்கித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயம். அதுபோல் செக்சையும் நினைக்கக்கூடாது.

தூக்கத்திற்கு முன்னால் ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுபோக்கு என்றும் செக்சை கருதிவிடக்கூடாது. தம்பதிகளிடையேயான செக்ஸ் என்பது கடமைக்காக என்ற நிலையில் இருந்து விடக்கூடாது. இருவரையும் தூக்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்தாகவும் அதை கருதிவிடக்கூடாது.

ஏதோ இதுவும் ஒரு வேலை என்ற மனநிலையில் இருவரும் உறவில் ஈடுபடவும் கூடாது. உறவுக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்கும் நாளில் காலையில் இருந்தே உங்கள் நினைவில் அந்த இன்பம் இருக்கட்டும். அதை நினைவில் வைத்துக்கொண்டே உற்சாகத்தோடு வேலைகளைப் பாருங்கள்.

அன்று இரவு உணவை சற்று முன்பாகவே முடித்துவிட்டு, வேலைகளை எல்லாம் செய்து முடியுங்கள். வழக்கமாக கணவனும்- மனைவியும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, அன்போடு, ஆவலோடு படுக்கை அறைக்குள் நுழையுங்கள்.

அங்கு சென்ற பின்பு தொந்தரவிற்குரிய பேச்சு, சிந்தனை எதுவும் தேவையில்லை. உடல், மனது இரண்டையும் உற்சாகப்படுத்தவும்- அன்பை மேம்படுத்தவும் செக்ஸ் அவசியம் என்பதை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபடுங்கள். காலையில் செயல்படுவது, அந்த நாள் முழுவதையும் மகிழ்ச்சிக்குரியதாக்கும்

உறவில் நீடித்த இன்பம் கிடைக்க‌!!!

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்… மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள்.

ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி ‘ஹார்டுவேர்’ போல ‘சாப்ட்வேரும்’ அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அதீத அவசியம்.

எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.

வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.

கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘ஆட்டத்தில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும். அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும்.

கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை. உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும்.

அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும்.

முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும். இன்னொரு முக்கியமான விஷயம்.

எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை!

Wednesday, March 23, 2011

ஒரு கணவன் - மனைவி அன்பை எவ்வாறு பரிமாறிக்கொள்ள வேண்டும் ......?

மனதுக்கும், செக்ஸ்க்கும் அளவு கடந்த நெருக்கம் உண்டு. மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளைக்கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும்.

* செக்ஸ் மகிழ்ச்சியை அதிகமாக கொண்டாட விரும்பும் தம்பதிகளுக்கு அடிப்படை தேவை அன்பும், நம்பிக்கையும். அதிகமான நம்பிக்கை வைத்து அன்பு செலுத் தப்படும்போதுதான் கணவன்- மனைவி இடையே காதல் கரைபுரண்டு ஓடும். இரு வரும் எல்லாவற்றையும் மனந்திறந்து பேசி, வெளிப்படையாக வாழ வேண்டும்.

* இயந்திரமயமான வாழ்க்கை முறை தம்பதிகளிடையேயான மனோரீதியான நெருக் கத்தை வெகுவாக குறைக்கிறது. எவ்வளவு அதிகமான வேலை, எவ்வளவு அதிகமான சம்பளம், வேலையில் எவ்வளவு பெரிய நெருக்கடி இருந்தாலும் மனைவிக்காக ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை கணவரும், கணவருக்காக ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை மனைவியும் குறைத்து விடக்கூடாது.

வேலை அழுத்தத்திலிருந்து விலகி, மாதத்தில் நான்கு நாட்களாவது குடும்பத்தினரோடு செலவிட வேண்டும். குடும்பத் தினரோடு வெளிïர் பயணம் செல்லவும் முன்வரவேண்டும்.

* தினமும் குறிப்பிட்ட நேரத்தை கணவரும்- மனைவியும் தங்களுக்காக ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து சினிமா பார்ப்பது, பாடல் கேட்பது அல்லது பாடுவது, விளையாடுவது, பேசிக்கொண்டிருப்பது.. இப்படி அவர் களுக்கு எது பிடித்தாலும் அதை செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* அடிக்கடி இருவரும் தங்களுக்குள் பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். அன்பை ஆழப்படுத்தும் சக்தி பரிசுகளுக்கு உண்டு.

* அலுவலகத்தில் இருந்து கணவர் திரும்பும்போது, மனைவி சமையல் அறையில் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தால் தானும் அங்கே சென்று மனைவிக்கு சின்னச்சின்ன உதவிகளை செய்ய ஆரம்பிக்கலாம்.

அந்த சந்தர்ப்பத்தில் தன் அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதை அருகிலிருந்து கூறத்தொடங்கிவிட்டாலே கணவர் மீது மனைவிக்கு தனி கரிசனம் உருவாகிவிடும்.

* படுக்கை அறைக்குள் எந்த வேலையையும் கொண்டு சொல்லாதீர்கள். படுக்கை அறை கணவன், மனைவிக்கு இடையேயான தனி உலகம். அந்த உலகத்திற்குள் சிந் தனையில்கூட உங்கள் இருவரையும் தவிர வேறுயாரும்-எதுவும் இருக்க வேண்டாம்.

பெண்களை எளிதாக கவரும் ஆண்களின் குணங்கள்!

ஒரு பெண்ணை அடைவது என்பது மிகவும் சுலபமான விடயம் அல்ல என்று கூறுபவர்களும் உண்டு. அதே சமயத்தில், ஒரு பெண்ணை நான் விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன் என்று முரண்பாடாக கூறுபவர்களும் உண்டு.

தான் விரும்பிய பெண்களை அடையும் ஆண்களுக்கு என்று சில விஷேசக் குணங்கள்இருப்பதாக காம சூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. அதாவாது,

பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.

பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.

விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.

அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.

உல்லாசமாக இருப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவன்.

அதிக துணிச்சல் உடையவன்.

இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.

காம சாஸ்திரம் நன்கு கற்றவன்.

தாராள மனப்பான்மை உடையவன்.

அடிக்கடி பெண்கள் பார்வையில்தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்.

ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.

ரகசியத்தை அறிந்தவன்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் மனதில் வெகுவாக இடம் பிடிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மையாகும்