Pages

Wednesday, March 23, 2011

ஒரு கணவன் - மனைவி அன்பை எவ்வாறு பரிமாறிக்கொள்ள வேண்டும் ......?

மனதுக்கும், செக்ஸ்க்கும் அளவு கடந்த நெருக்கம் உண்டு. மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளைக்கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும்.

* செக்ஸ் மகிழ்ச்சியை அதிகமாக கொண்டாட விரும்பும் தம்பதிகளுக்கு அடிப்படை தேவை அன்பும், நம்பிக்கையும். அதிகமான நம்பிக்கை வைத்து அன்பு செலுத் தப்படும்போதுதான் கணவன்- மனைவி இடையே காதல் கரைபுரண்டு ஓடும். இரு வரும் எல்லாவற்றையும் மனந்திறந்து பேசி, வெளிப்படையாக வாழ வேண்டும்.

* இயந்திரமயமான வாழ்க்கை முறை தம்பதிகளிடையேயான மனோரீதியான நெருக் கத்தை வெகுவாக குறைக்கிறது. எவ்வளவு அதிகமான வேலை, எவ்வளவு அதிகமான சம்பளம், வேலையில் எவ்வளவு பெரிய நெருக்கடி இருந்தாலும் மனைவிக்காக ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை கணவரும், கணவருக்காக ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை மனைவியும் குறைத்து விடக்கூடாது.

வேலை அழுத்தத்திலிருந்து விலகி, மாதத்தில் நான்கு நாட்களாவது குடும்பத்தினரோடு செலவிட வேண்டும். குடும்பத் தினரோடு வெளிïர் பயணம் செல்லவும் முன்வரவேண்டும்.

* தினமும் குறிப்பிட்ட நேரத்தை கணவரும்- மனைவியும் தங்களுக்காக ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து சினிமா பார்ப்பது, பாடல் கேட்பது அல்லது பாடுவது, விளையாடுவது, பேசிக்கொண்டிருப்பது.. இப்படி அவர் களுக்கு எது பிடித்தாலும் அதை செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* அடிக்கடி இருவரும் தங்களுக்குள் பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். அன்பை ஆழப்படுத்தும் சக்தி பரிசுகளுக்கு உண்டு.

* அலுவலகத்தில் இருந்து கணவர் திரும்பும்போது, மனைவி சமையல் அறையில் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தால் தானும் அங்கே சென்று மனைவிக்கு சின்னச்சின்ன உதவிகளை செய்ய ஆரம்பிக்கலாம்.

அந்த சந்தர்ப்பத்தில் தன் அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதை அருகிலிருந்து கூறத்தொடங்கிவிட்டாலே கணவர் மீது மனைவிக்கு தனி கரிசனம் உருவாகிவிடும்.

* படுக்கை அறைக்குள் எந்த வேலையையும் கொண்டு சொல்லாதீர்கள். படுக்கை அறை கணவன், மனைவிக்கு இடையேயான தனி உலகம். அந்த உலகத்திற்குள் சிந் தனையில்கூட உங்கள் இருவரையும் தவிர வேறுயாரும்-எதுவும் இருக்க வேண்டாம்.

பெண்களை எளிதாக கவரும் ஆண்களின் குணங்கள்!

ஒரு பெண்ணை அடைவது என்பது மிகவும் சுலபமான விடயம் அல்ல என்று கூறுபவர்களும் உண்டு. அதே சமயத்தில், ஒரு பெண்ணை நான் விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன் என்று முரண்பாடாக கூறுபவர்களும் உண்டு.

தான் விரும்பிய பெண்களை அடையும் ஆண்களுக்கு என்று சில விஷேசக் குணங்கள்இருப்பதாக காம சூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. அதாவாது,

பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.

பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.

விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.

அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.

உல்லாசமாக இருப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவன்.

அதிக துணிச்சல் உடையவன்.

இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.

காம சாஸ்திரம் நன்கு கற்றவன்.

தாராள மனப்பான்மை உடையவன்.

அடிக்கடி பெண்கள் பார்வையில்தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்.

ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.

ரகசியத்தை அறிந்தவன்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் மனதில் வெகுவாக இடம் பிடிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மையாகும்